இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(01-02-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(01-02-2023)

இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு – தை 18
1,#நாள்: புதன்கிழமை - (01.02.2023)
2,#நட்சத்திரம் : மிருகசீரிடம் நாள் முழுவதும் பிறகு திருவாதிரை
3,#திதி : 05:02 PM வரை ஏகாதசி பின்னர் துவாதசி
4,#யோகம்: சித்த யோகம்
5,#கரணம் : பத்திரை மாலை 05:00 வரை பின்பு பவம்
நல்லநேரம்: காலை 9.00 - 10.00 / மாலை 4.30 - 5.30
#புதன்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
#இன்று:சுபமுகூர்த்த நாள்
சர்வ ஏகாதசி
நல்ல நேரம்
09:00 - 10:00 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
06:30 - 07:30 மா / PM
இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00
#சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்
#சந்திராஷ்டமம்
அனுஷம்
#நாள் :சம நோக்கு நாள்
#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 10
சூரிய உதயம்
06:36 காலை /
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /
இந்தியா கடரோர காவல்ப்படை தினம்
விடுதலை போராட்ட வீரரும் சென்னை மாகாண முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம்
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வெளியில் யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களிடம் மனக்கசப்பு வரும். திட்டமிட்ட வேலைகள் எவ் வித தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே, எடுத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் வரும். மன உளைச்சல் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, தன் பலம் பலம், பலவீனத்தை நன்கு உணர முடியும். புது திட்டங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். நட்பால் நல்லது நடக்கும். மனதில் பணம் சேமிக்கும் எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீடு பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் புது நபர்கள் வருகை தருவர். நல்லவர்களின் தொடர்பால் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
What's Your Reaction?






