இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(09-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(09-03-2020)

Mar 9, 2020 - 01:20
 0  161
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(09-03-2020)

*மாசி ~ 26*  

*��09.02.2020��*.

*திங்கள் கிழமை*

*சந்திராஷ்டமம் ~ திருவோணம்,அவிட்டம்*

⚜��⚜��⚜��⚜��⚜

*(09-03-2020)* 

*ராசி பலன்கள்*

*��மேஷம்*

 நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய  நபர்களால் மாற்றங்கள் உண்டாகலாம்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : அன்யோன்யம் அதிகரிக்கும். 

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------

 


*��ரிஷபம்*
 உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பணியில் தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : மேன்மையான நாள். 

ரோகிணி :  பயணங்கள் சாதகமாகும்.

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------

 


*��மிதுனம்*

 பணியில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தொழில் முனைவோர்கள் புதிய யுக்திகளை பயின்று அதை கையாளுவீர்கள். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியங்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 

திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------

 

 

*��கடகம்*

 மூத்த உடன்பிறப்புகளால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிலம் சம்பந்தமான விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளில் முடிவுகள் சாதகமாக அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்


புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

பூசம் :  இலாபம் கிடைக்கும்.

ஆயில்யம் : பொருட்சேர்க்கை உண்டாகும். 
---------------------------------------

 

 

*��சிம்மம்*

 சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை களைவீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் உண்டாகலாம். திறமைகள் வெளிப்பட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


மகம் : எதிர்ப்புகள் குறையும்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

 

 

*��கன்னி*

 குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழில்வகை இலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  நிறம்


உத்திரம் : கலகலப்பான நாள்.

அஸ்தம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------

 

 

*��துலாம்*

 கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தநிலை தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். 

சுவாதி : முதலீடுகளில் கவனம் தேவை.

விசாகம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------

 

 

*��விருச்சகம்*

 உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------

 

 

*��தனுசு*

 நீண்ட நாள் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தேவையில்லாத சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் :  புதிய நட்பு கிடைக்கும்.

உத்திராடம் : சஞ்சலம் உண்டாகும்.
---------------------------------------

 

 

*��மகரம்*

 பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் போது நிதானம் வேண்டும். பணி சம்பந்தமான பயணங்களின் போது கோப்புகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

திருவோணம் : நிதானம் வேண்டும்.

அவிட்டம் : தடங்கல்கள் ஏற்படும். 
---------------------------------------

 

 


*��கும்பம்*

  வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எண்ணங்களில் புதுவகையான மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். மனைகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அவிட்டம் : செல்வாக்கு உயரும்.

சதயம் : மாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும். 
---------------------------------------

 

 


*��மீனம்*

 செய்யும் வேலைகளில் நிதானம் வேண்டும்.  தொழிலில் புதுவகையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றி மறையும்.  நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் சாதகமாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்


பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

ரேவதி : இடமாற்றம் சாதகமாகும்.
---------------------------------------

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow