இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(08-06-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

Jun 8, 2020 - 01:00
 0  128
இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(08-06-2020)

இன்றைய பஞ்சாங்கமும் இராசி பலன்களும் -08.06.2020
- ஜூன் 07, 2020

 இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 08-06-2020 திங்கட்கிழமை சார்வரி வருடம் வைகாசி மாதம் 26ஆம் தேதி தேய்பிறை கீழ்நோக்கு நாள் இன்று இரவு 10.30 மணி வரை திருதியை அதன் பின்பு சதுர்த்தி திதி.
நல்ல நேரம்
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
ராகு காலம் 7:30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
குளிகை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
 திங்கட்கிழமை என்பதால் சிவபெருமானை வணங்குவதால் கஷ்டங்கள் குறையும் 


இனி ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலனை பார்ப்போம்

 மேஷம்

சமூக பணியில் ஈடுபடும் அன்பர்களுக்கு புகழ் உண்டாகும் எதிர்காலம் தொடர்பான தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.
வங்கித் துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
நண்பர்களின் உதவிகள் தக்க தருணத்தில் கைகொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
கதை கவிதை கட்டுரை எழுதும் அன்பர்களுக்கு புதிய பாதை தென்படும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும் நாளாக அமையும்.

 ரிஷபம்

அன்பர்களே உங்களின் ராசி அதிபதி
அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும்.
உடல் நலனில் கவனம் வேண்டும் வீண் அலைச்சல்கள் உண்டாகும் உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
வாரத்தில் உங்கள் பிடிவாதப் போக்கை மந்தநிலை தென்படும் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் வரும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையளிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அதிக கவனம் தேவைப்படும் நாளாக அமையும் இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிற ஆடை அணிந்து தக்ஷிணாமூர்த்தியை வணங்கும்.

 மிதுனம்

பிரபலங்களின் நட்பு கிடைக்கும் உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
இழந்த அல்லது அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை நியமிப்பதாக பனை உயரும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் குறைந்து தெளிவு பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். மாணவ மாணவிகளுக்கு எண்ணங்கள் நடைபெறும் நாளாக அமையும்.

 கடகம்

வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் உத்தியோகத்தில் கோப்புகளை கையாளும்போது அதிகக் கவனம் வேண்டும்.
தாய் மாமன் வழி உறவினர்களால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும் உறவினர்கள் இடையே இருந்து வந்த பகை மாறி அன்பு பாராட்டுவார்கள் தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் லாபம்.
உடல் ஆரோக்கியம் சீர் பெறும் கடன்கள் அடைபடும் கூடிய சாதகமான வாய்ப்புகள் அமையும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக் குறையாது.
அக்கம் பக்கத்து வீட்டாருடன் இணக்கமான செல்வதால் நன்மைகள் நடைபெறும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அதிக ஆர்வம் உண்டாகும் நாளாக அமையும்.

சிம்மம் ராசி 

தொழில் வியாபாரத்தில் உள்ள புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள் பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும் பொதுக்கூட்ட பேச்சுக்கள் ஆதரவு கிடைக்கும் பூமி லாபம் உண்டாகும் நீர்நிலை சம்பந்தமான தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உத்யோகத்தில் வேலைப்பளு குறையும் பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
புண்ணிய தல யாத்திரை செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும் மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி ராசி

 வாகன மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் விவாதங்களால் புகழ் உண்டாகும் பயணங்களால் நன்மை உண்டாகும் வீடு மனை தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் கணவன் மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் நீண்ட நாட்களாக நீங்கள் சந்திக்க நினைத்த நண்பர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரலாம் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும் தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தி கிறேன் என்று அகலக்கால் வைக்க வேண்டாம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி திறன் அதிகரிக்கும் நாளாக அமையும்.

 துலாம் ராசி

தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றிபெறும் மனதில் எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும் உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் பணிபுரிவதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும் கால்நடைகளிடம் கவனமாக செயல்படவும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும் தொழில் வியாபாரத்தில் தைரியத்துடன் சில முக்கியமான முடிவுகள் எடுப்பதால் கூட்டாளி களின் ஆதரவு பெருகும்.
கணவன்-மனைவி இடையே அன்பும் அரவணைப்பும் மேலோங்கும் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும் வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும்.

 விருச்சிகம் ராசி


குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் தனவரவு திருப்தி தரும் உத்தியோகத்தில் வேலைகளை திறம்பட அறிவுபூர்வமாக செய்வதால் உங்களின் மீதான நம்பிக்கையும் ஆதரவும் அதிகரிக்கும்.
சாதுரியமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள் புதிய முயற்சிகளை செய்வதில் சிந்தித்து செயல் இரவும் குடும்ப உறுப்பினர்களிடையே மனம்விட்டு பேசுவதால் கருத்து வேற்றுமைகளும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் பலிதமாகும்.
பொன் பொருள் சேர்க்கை எண்ணங்கள் அதிகரிக்கும் மனதில் ஒருவிதமான குதுகலம் குடிகொள்ளும் நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் வேகத்துடன் செயல்படும் நாளாக அமையும்.

 தனுசு ராசி

புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனம்புரியாத கவலை மற்றும் பய உணர்வினால் சோர்வு உண்டாகும் பணத்திற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அலைச்சல் அதிகரிக்கும் உறவினர்களிடம் இருந்த மனவருத்தங்கள் நீங்கும் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிப்பதால் விரக்தியான நிலை தோன்றக்கூடும்.
சுபகாரியப் பேச்சுக்கள் காலதாமதமாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சுறுசுறுப்பின்றி சோர்வாக செயல்படுவீர்கள்.
நண்பர்கள் தக்க சமயத்தில் கலந்துகொள்வார்கள் இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காலதாமதம் உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்த நிலை தோன்றும் நாளாக அமையும்.

 மகரம் ராசி

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் மறைமுகமாக அதிகரித்தாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் எண்ணம் உருவாகும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு விற்பனை உயரும் கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும்.
குடும்ப உறுப்பினர்களில் சிலர் பாராமுகமாக நடந்து கொள்வார்கள் சிறு தூரப் பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும் குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அருள்தரும் யாகங்களில் கலந்து கொள்வீர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் கொடுக்கல்-வாங்கலில் புதிய முதலீட்டை தவிர்க்கவும் நண்பர்கள் பகையாக மாறும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

 கும்பம் ராசி

தொழில் வியாபாரம் வளர்ச்சி துறை சார்ந்த வல்லுநர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும்.
மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசாங்கப் பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவான நிலை தென்படும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடைபெறுவதற்கு கூட்டாளிகளின் அனுகூலமான போக்கு மனதிற்கு தெம்பை அளிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இனிமையான நாளாக அமையும்.

 மீனம் ராசி

அரசாங்கம் தொடர்பான பணிகளால் அனுகூலமும் உண்டாகும் கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் ஆவணங்களை கையாளும் பொழுது நிதானம் வேண்டும் சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும் தொழில் வியாபாரத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உங்களது புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும் வீட்டுப் பிரச்சினைகளை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆற்றல் அதிகரிக்கும் நாளாக அமையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow