இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(19-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(19-01-2023)

 0  4
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழக்கிழமை(19-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 5 

1,#நாள்: வியாழக்கிழமை (19.01.2023)

2,#நட்சத்திரம் : கேட்டை 12:38 PM வரை பிறகு மூலம்

3,#திதி : காலை 10:18  வரை துவாதசி பின்னர் திரயோதசி

4,#யோகம் : சித்த யோகம்

5,#கரணம் : கரசை

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

#வியாழக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

#இன்று:பிரதோஷம்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.30 - 03.00
எமகண்டம்
06.00 - 07.30
குளிகை
09.00 - 10.30

சூலம்:தெற்கு
பரிகாரம்-தைலம்

#சந்திராஷ்டமம்
கார்த்திகை+ரோகிணி

#நாள்: சம நோக்கு நாள்

#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 32

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:30 மாலை /

#தோற்றம்

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பிறந்த தினம்

விடுதலை போராட்ட வீரர் 
ஜி.சுப்பிரமணிய ஐயர் 
பிறந்த தினம்

#மறைவு

இந்திய ஆன்மீகவாதி ஓஷோ நினைவு தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். பண வரவில் நெருக்கடிகள் குறையும். புது தொழில் யோகம் அமையும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாகும். முக்கிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு உற்சாகம் தரும். உடல் அசதி, சோர்வு நீங்கும். தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, பெற்றோர்களிடம் மனஸ்தாபம் வந்து போகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் உள்ளவர்கள் பாசமழை பொழிவர். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. பொருளாதார நிலை சீரடையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் பக்கபலமாக இருப்பர். வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பாராட்டு கிடைக்கும்

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்துடன் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் வெகுவாக உயரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீனம்

மீன ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை கானப்படும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow