இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(20-01-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(20-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு – தை 6
1*,#நாள்*: வெள்ளிக்கிழமை (20.1.2023)
2,*#நட்சத்திரம்* : மூலம் காலை 11:20 வரை பிறகு பூராடம்
3,*#திதி* : 08:00 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி
4,*#யோகம்*: அமிர்த - சித்த யோகம்
5,*#கரணம்* : பத்திரை மாலை 06:10 வரை பிறகு சகுனி
நல்லநேரம் : காலை : 12.30 -1.30 / மாலை 4.30 - 5.30
#வெள்ளிக்கிழமை
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
#இன்று: சுபமுகூர்த்த நாள்
மாத சிவராத்திரி
நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
06:30 - 07:30 மா / PM
இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00
#சூலம்:மேற்கு
பரிகாரம்-வெல்லம்
#சந்திராஷ்டமம்
ரோகிணி+மிருகசீரிடம்
#நாள்:கீழ் நோக்கு நாள்
#லக்னம்:மகர லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 21
சூரிய உதயம்
06:35 காலை /
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தீர்க்க முடியாத பிரச்சனையில் ஒன்று தீரும். தேக நலம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். பண நெருக்கடி இருக்கும். மறைந்து கிடைக்கும் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும். சேமிக்க வேண்டுமென்ற வைராக்கியம் இருக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். எதிரிகள் விலகியே நிற்பர். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களின் சுயரூபத்தை புரிந்துகொள்ள முடியும். பெண்கள் வழியில் சில தொல்லைகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, மனதில் புது சிந்தனைகள் தோன்றும். தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களிடம் சில மனசங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தினரை அனுசரித்து போவது நல்லது. புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். வேண்டியவர்களிடம் சின்ன மனகசப்பு வருத்தம் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, பெற்றோரின் ஆலோசனை கைகொடுக்கும். பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நல்லதையும் கெட்டதையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, பழைய பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும். சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். வாகனத்தில் பொறுமையாக செல்லவும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே, மனதில் பட்டதை தைரியமாக பேசுவது நல்லது. யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.