இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(21-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(21-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(21-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 7 

1,*#நாள்*: சனிக்கிழமை (21.1.2023)

2,*#நட்சத்திரம்* : பூராடம் 09:40 AM வரை பிறகு உத்திராடம் 06:29 AM வரை பிறகு திருவோணம்

3,*#திதி* : 02:23 AM வரை அமாவாசை பின்னர் பிரதமை

4,*#யோகம்* : சித்த யோகம்

5,*#கரணம்*: சதுஷ்பாதம் மாலை 03:45 வரை பிறகு நாகவம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 3.00 - 4.00

#சனிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

#இன்று: தை அமாவாசை

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
03:00 - 04:00 மா / PM
கௌரி நல்ல நேரம் 
10:30 - 11:30 கா / AM
09:30 - 10:30 மா / PM

இராகு காலம்
09.00 - 10.30
எமகண்டம்
01.30 - 03.00
குளிகை
06.00 - 07.30

#சூலம்:கிழக்கு
பரிகாரம்-தயிர்

#சந்திராஷ்டமம்
மிருகசீரிடம்

கீழ் நோக்கு நாள்

#லக்னம்:மகர லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 10

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /

#தோற்றம் 

இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ் ராவ் பிறந்த தினம்

#மறைவு

இந்திய விடுதலை போராட்ட வீரர் பிஹாரி போஸ் நினைவு தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். சமூக நலனில் அக்கறை ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும் இன்றும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உடல், மன சோர்வு நீங்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் தேவை

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். தெய்வ வழிபாடு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்

கன்னி

கன்னி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். மனதில் தெளிவு நிலை உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, பழைய சிக்கலில் ஒன்று தீரும். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் அவசியம். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆனந்தம் கூடும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். நண்பர்களிடம் நல்ல அனுசரணை இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.