இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(08-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(08-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(08-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
வைகாசி 25 

1,#நாள்:புதன்கிழமை - (08.06.2022)

2,#நட்சத்திரம் : உத்திரம் 04:31 AM வரை பிறகு அஸ்தம்

3,#திதி : 08:30 AM வரை அஷ்டமி பின்னர் நவமி

4,#யோகம்: அமிர்த - மரண யோகம்

5,#கரணம் : கௌலவம் மதியம் 02:59 வரை பின்பு தைதுலம்

நல்லநேரம்: காலை 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

#புதன்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)

சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க வணிகம் செய்ய சிறந்த நாள் 

இன்று:நவமி

வழிபட வேண்டிய தெய்வம் லட்சுமி நரசிம்மர் 

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00

சூலம்:வடக்கு
பரிகாரம்: பால்

#சந்திராஷ்டமம்
அவிட்டம்+சதயம்

மேல் நோக்கு நாள்

#லக்னம்: ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 04

#சூரிய_உதயம்
Sun Rise 05:52 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலமும், ஒற்றுமையும் நிரம்பி இருக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் வரும். கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதை விட்டு அகலும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிட்டும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, நல்ல தகவல் ஒன்று காதில் வந்து விழும். முன்கோபத்தை குறைக்கவும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, நல்ல மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். மனதில் புது புது யோசனைகள் தோன்றும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். மனம் தெளிவு பெரும். பயணங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் சுமுக நிலை காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனமாக இருக்கவும்

மீனம்

மீன ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். முக்கிய வேலைகள் தாமதமின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.