இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-06-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-06-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-06-2022)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு 
வைகாசி 24 

1,#நாள்: செவ்வாய்கிழமை (07.06.2022)

2,#நட்சத்திரம்: பூரம் 03:49 AM வரை பிறகு உத்திரம்

3,#திதி : 07:55 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி

4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்

5,#கரணம் : பத்திரை மாலை 04:18 வரை பின்பு பவம்

நல்லநேரம் : காலை 10.30 - 11.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை 
சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

இன்று: அஷ்டமி

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

சூலம்:வடக்கு
பரிகாரம்- பால்

#சந்திராஷ்டமம்
திருவோணம் +அவிட்டம்

கீழ் நோக்கு நாள்

#லக்னம்: ரிஷப லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 13

#சூரிய_உதயம்
Sun Rise 05:52 காலை / AM

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். உறவினர்களின் அன்பு பாராட்டுவர். கணவன் மனைவிடையே மகிழ்ச்சி பொங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். தெய்விக தரிசனம் கிட்டும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, பழைய கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சி செய்யவும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வருவர். எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. பண வரவில் சிறிய தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகரம் 

மகர ராசி நேயர்களே, மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று நிதானம் தேவை 

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உடன்பிறப்பு வகையில் மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.