இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(30-01-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(30-01-2023)
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு – தை 16
1,#நாள்: திங்கட்கிழமை (30.01.2023)
2,#நட்சத்திரம் : கார்த்திகை நாள் முழுவதும் பிறகு ரோஹிணி
3,#திதி : மாலை 03:00 வரை நவமி பின்னர் தசமி
4,#யோகம் : மரண - அமிர்த யோகம்
5,#கரணம் : கௌலவம் மாலை 03:00 வரை பின்பு தைதுலம்
நல்லநேரம் : காலை 6.30 - 7.30 / மாலை 4.30 - 5.30
#திங்கட்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்
இன்று:கார்த்திகை விரதம்
நவமி
நல்ல நேரம்
06:30 - 07:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
07:30 - 08:30 மா / PM
இராகு காலம்
07.30 - 09.00
எமகண்டம்
10.30 - 12.00
குளிகை
01.30 - 03.00
#சூலம்:கிழக்கு
பரிகாரம்-தயிர்
#சந்திராஷ்டமம்
சித்திரை+ சுவாதி
#நாள்:கீழ் நோக்கு நாள்
#லக்னம்:மகர லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 32
சூரிய உதயம்
06:36 காலை /
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /
காந்திஜி நினைவு தினம்
தியாகிகள் தினம்
சுதந்திர இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் பிறந்த தினம்
விடுதலை போரட்ட வீரர் சி.குமரப்ப பிறந்த தினம்
ராமலிங்க அடிகளார் நினைவு தினம்
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். பண விவகாரத்தில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். வேண்டியவர்கள் ஒத்தாசையாக இருப்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, வாக்கு வன்மையால் சாதிக்க முடியும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். பிடிவாத குணத்தை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்பு நிலவும். உறவினர்களுடன் உறவு மேம்படும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமும் கவனமும் அவசியம்
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். முன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்ப விவகாரங்களை வெளியில் பகிர வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். தெய்வ வழிபாடு சிறக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளவும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தியானத்தால் மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
What's Your Reaction?