திருக்குறள் - குறள் 1160
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.
திருக்குறள் - குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?.
மு.வரதராசனார் உரை:
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
சாலமன் பாப்பையா உரை:
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.
பரிமேலழகர் உரை:
(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின்
மணக்குடவர் உரை:
பொறத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர். அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிரிவினைச் சொல்லுங்கால் அதற்கு உடன்பட்டுப் பிரியுங்கால் உண்டாகும் துன்பத்தினையும் தாங்கிக்கொண்டு, பிரிந்தபின்னர் பொறுத்திருந்து உயிர்வாழும் மகளிர் பலருண்டு.
Translation:
Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day!.
Explanation:
As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்