திருக்குறள் - குறள் 1153

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.


திருக்குறள் - குறள் 1153


அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; பிரிந்திடேன் என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.

மு.வரதராசனார் உரை:
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா உரை:
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும்


மணக்குடவர் உரை:
பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
'பிரியேன்' என்று தான் சொன்னதையும் நமது பிரிவாற்றாமையினையும் அறிந்து காதலரிடத்தும் ஒரேவழி பிரிவு நிகழ்வதால் அவர் அன்புடையவர் என்று தெளிவது அரிதாக இருக்கின்றது.

Translation:
To trust henceforth is hard, if ever he depart,
E'en he, who knows his promise and my breaking heart.

Explanation:
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்