திருக்குறள் - குறள் 1140

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1140


யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

மு.வரதராசனார் உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.

பரிமேலழகர் உரை:
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்ச


மணக்குடவர் உரை:
யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
யாம் அடைந்த நோய்களை அறிவில்லாதவர்கள் அடையாமையினால் யாம் கண்ணாற் காணுமாறு எம்மைப் பார்த்து அவர்கள் நகைக்கின்றார்கள்.

Translation:
Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie.

Explanation:
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்