திருக்குறள் - குறள் 1141
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல்.
திருக்குறள் - குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.
மு.வரதராசனார் உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , ணுத்துறவுஉரைத்தலின்
மணக்குடவர் உரை:
நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இப்பெண்ணுடன் எமக்குக் காதல் உண்டானதை இவ்வூரார் பேசுவதால் அவளை பெறாமல் வருந்தும் என் அரிய உயிர். பெற்றது போன்ற நிலையுறும். இதனை என்னையன்றி, எனது பாக்கியத்தால் இவ்வூரார் பலரும் அறியவில்லை.
Translation:
By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!.
Explanation:
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்