திருக்குறள் - குறள் 1147

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல்.


திருக்குறள் - குறள் 1147


ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.

மு.வரதராசனார் உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

பரிமேலழகர் உரை:
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எட


மணக்குடவர் உரை:
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இந்தக் காமநோயாகிய பயிரானது இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாகவும் அதுகேட்ட அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்கின்றது.

Translation:
My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.

Explanation:
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்