திருக்குறள் - குறள் 1142
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல்.
திருக்குறள் - குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.
மு.வரதராசனார் உரை:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா உரை:
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான
மணக்குடவர் உரை:
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மலர்போன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் அருமையினை அறிந்து கொள்ளாமல் இவ்வூர் அப்பெண்ணை எளியவளாகக் கருதி அலர் கூறுவதைச் செய்தது.
Translation:
The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.
Explanation:
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்