திருக்குறள் - குறள் 1138
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்.
திருக்குறள் - குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
மு.வரதராசனார் உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.
சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
பரிமேலழகர் உரை:
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறை
மணக்குடவர் உரை:
நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
'இவர் நிறை குணத்தினால் நாம் செல்வதற்கு அருமையானவர்" என்று அஞ்சுதல் செய்யாமல் அன்பு காட்டத் தக்கவர் என்று இரக்கமும் கொள்ளாமல் மகளிர் காமம் அவர் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலர் அறிய மன்றத்தில் வெளிப்பட்டு விடுகின்றது.
Translation:
In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity!.
Explanation:
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்