Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1139

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
களவியல்
குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
— திருவள்ளுவர் · நாணுத்துறவுரைத்தல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1139 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

மு.வரதராசனார் உரை

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங

மணக்குடவர் உரை

என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

'யான் முன்பு அடங்கி இருந்ததால் எல்லாரும் என்னை அறியவில்லை". இனி அவ்வாறின்றி யானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று கருதி என் காமம் இவ்வூர் வீதியின் கண்ணே மயங்கிச் சுழல்கின்றது.

Translation

'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

Explanation

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

திருக்குறள் - குறள் 1139
திருக்குறள் ஓவியம் - குறள் 1139
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 114: நாணுத்துறவுரைத்தல்