திருக்குறள் - குறள் 1133

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1133


நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

மு.வரதராசனார் உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

பரிமேலழகர் உரை:
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன


மணக்குடவர் உரை:
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நாணத்தினையும் மிக்க ஆண் தன்மையினையும் யான் பண்டு கொண்டிருந்தேன். அவை காமத்தால் நீக்கப்பட்டுவிட்டதால், இன்று காமுற்றார் ஏறுகின்ற மடலினை உடையவனானேன்.

Translation:
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.

Explanation:
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்