திருக்குறள் - குறள் 1132

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்.


திருக்குறள் - குறள் 1132


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

மு.வரதராசனார் உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

பரிமேலழகர் உரை:
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வரு


மணக்குடவர் உரை:
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வருத்தத்தினைப் பொறுத்துக்க கொள்ளமுடியாத உடம்பும் உயிரும் நாணத்தினை அகற்றிவிட்டு வருத்தத்திற்குப் பாதுகாப்பான மடல் மாவினை ஊர்ந்து செல்லக் கருதுகின்றன.

Translation:
My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm'.

Explanation:
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்