ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
Thirukural · அதிகாரம் 38
திருக்குறள் - அதிகாரம் ஊழ்
Showing 1 - 10 of 10
குறள் 371 குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.
குறள் 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.
குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.
குறள் 375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.
குறள் 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.
குறள் 377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
குறள் 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.
குறள் 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.
குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.