திருக்குறள் - குறள் 375
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- ஊழியல்
- அதிகாரம்:
- ஊழ்
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
திருக்குறள் - குறள் 375 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா'
மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
செல்வத்தை ஆக்குவதற்கு நல்லவையெல்லாம் தீயனவாய் அழிக்கும். அதுவேயன்றித் தீயவையெல்லாம் நல்லனவாய் ஆக்கும். இவை ஊழினால் நடப்பதாகும்.
Translation
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.
Explanation
Let In the acquisition of property, every thing favorable becomes unfavorable, and (on the other hand) everything unfavorable becomes favorable, (through the power of fate).
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 38: ஊழ்
குறள் 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.
குறள் 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.
குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.
குறள் 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.
குறள் 377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
குறள் 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.
குறள் 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.
குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.