சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போமா?

Aug 29, 2021 - 06:59
Aug 29, 2021 - 07:03
 0  70
சுவையான  உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?

தேவையானவை -

உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு சிறியத்துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடலை மாவு - இரண்டு கோப்பை
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - இரண்டு கோப்பை
கொத்தமல்லி - ஒரு பிடி

செய்முறை 


உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கிழங்குடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பை, கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பிறகு அரைத்த கலவையைப்போட்டு வதக்கி அரைதேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி உப்புத்தூளைப் போட்டு கலக்கி கிழங்குக் கலவையுடன் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
பிறகு கடலைமாவில் ஆப்பச்சோடா மற்றும் மீதியுள்ள உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
பிறகு அடுப்பில் சூடான எண்ணெய் இருந்தால் அதில் ஒரு மேசைக்கரண்டியை எடுத்து மாவில் ஊற்றி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பிறகு தயாரித்துள்ள கிழங்கு கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டையாக எடுத்து மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சூடாக இந்த உருளைக்கிழங்கு போண்டாவை தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow