கச்சான் அல்வா செய்வது எப்படி?

Sep 24, 2021 - 09:12
 0  627
கச்சான் அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்  

சீனி (Sugar) - ஒரு கப்
வேர்க்கடலை (கச்சான் கடலை) - ஒரு கப்
நசுக்கிய ஏலக்காய் - சிறிது

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து சீனி கரையும் வரை சூடாக்கவும். கம்பி பதத்திற்கு வரும்முன் ஏலக்காயைப் போட்டு அடுப்பை நிறுத்திவிட்டு, வேர்க்கடலையைப் போட்டு நன்றாக கிளறவும்

பிறகு இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு சூட்டுடனே  துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும் .

சுவையான கச்சான் அல்வா ரெடி. ஆறிய பிறகு சாப்பிடவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow