சுவையான தேங்காய் உருளைக்கிழங்கு முட்டைக்கறி
தேவையான பொருட்கள்
முட்டை - 6
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பச்சைமிளகாய் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
நெய் - 25 கிராம்
கொத்தமல்லித் தழை - 4 கொத்து
கறிவேப்பிலை - 4 கொத்து
செய்முறை
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நான்கு தூண்டுகளாக நறுக்கி போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
3. உருளைக்கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி விட்டு தோலை உரித்துக் கொள்ளவும்.
4. அதே போல் முட்டை வெந்ததும் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
5. வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
6. அதில் முட்டை, உருளைக்கிழங்கு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 5 நிமிடம் நன்றாக பிரட்டி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி தயார்.
What's Your Reaction?