வட்டுக்கத்தரிக்காய் - கண்டங்கத்தரிக்காய் கறி

வட்டுக்கத்தரிக்காய் - கண்டங்கத்தரிக்காய் கறி

வட்டுக்கத்தரிக்காய் - கண்டங்கத்தரிக்காய் கறி

தேவையான பொருட்கள்:
400 கிராம் வட்டு - கண்டங்கத்தரிக்காய்
125 கிராம் வெங்காயம்
5 பச்சை மிளகாய்
1 1/2 தேகரண்டி சின்னச்சீரகம்
1 தேகரண்டி மஞ்சள் தூள்
12 கிராம் புளி - விதை நீக்கப்பட்டது - சிறிய பாக்கு அளவு.
1 கப் தேங்காய்ப் பால் - முதலாம் பால்
1 மேகரண்டி மாசிக்கருவாட்டுத்தூள்
4 மேகரண்டி எண்ணை
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:
400 கிராம் வட்டுக்கத்தரிக்காயை - கண்டங்கத்தரிக்காயை கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கி 4 மேகரண்டி எண்ணைவிட்டு அதனுள் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும். 2 நிமிடங்கள் வெங்காயம் வதங்கிய பின்பு அதனுள் வெட்டிய கத்தரிக்காயைச் சேர்த்து மெல்லிய சூட்டில் வதக்கவும்.
கத்தரிக்காய் வதங்கிய பின்பு அதனுள் 3/4 கப் தண்ணீர் அல்லது தேங்காயின் இரண்டாம் பால், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து சட்டியை மூடிவைத்து அவியவிடவும். கத்தரிக்காய் அவிந்த பின்பு அதனுள் கரைத்து வைத்த 1 கப் புளிக்கரைசல், சின்னச்சீரகம், மாசிக்கருவாட்டுத்தூள், கருவேப்பிலை சேர்த்து கறியை அவியவிடவும். பின்பு அதனுள் தேங்காயின் முதற்பால் சேர்த்து இரு தடவை கறி நன்கு கொதித்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.