சுவையான சுருள் முறுக்கு

தேவையான பொருட்கள்
பச்சரிசி - அரை படி
பயத்தம் பருப்பு - அரை கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீனி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை
1. அரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மாவு கெட்டி விழாமல் இருக்க நடுநடுவே மிக்ஸியை திறந்து கிளறிவிடவும். அரைத்த மாவை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். சல்லடையில் தங்கும் கப்பியை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
2. அரைத்து சலித்த மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுத்து எடுக்கவும். வறுத்த மாவை மீண்டும் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
3. பயத்தம் பருப்பை வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்த பயத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து வைக்கவும்.
4. தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சீனி சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு சீனி கரைந்ததும் இறக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் பயத்தம் மாவு கலவையை எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து கலந்து அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பிசையவும். மேலும் தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
6. மாவின் மேல் ஒரு மேசைக்கரண்டி அளவு சூடான எண்ணெய் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
7. பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டையாக உருட்டி கொய்யா இலையின் பின்புறம் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு அதில் வைத்து தீட்டவும். பின்னர் தீட்டிய மாவை இலையிலிருந்து எடுத்து இரண்டு முனையையும் இணைத்து ஒட்டவும்.
8. இதைப் போல் எல்லா மாவிலும் செய்து சிறிது நேரம் காய விடவும்.
9. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த சுருள் முறுக்கை போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
What's Your Reaction?






