ஹைதராபாத் மீன் தம் பிரியாணி

 0  136
ஹைதராபாத் மீன் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் 

வஞ்சிரம் மீன் 3/4 கிலோ
பாசுமதி அரிசி 3 கப்
வெங்காயம் 4
தேங்காய்பால் 1/2 கப்
தயிர் 350 கிராம்
எண்ணெய் 3 ஸ்பூன்
நெய் 1/4 கப்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 2 ஸ்பூன்
எலுமிச்சை 1
உப்பு
புதினா சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு தலா 2

செய்முறை 

மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும். மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் உலை நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதிவந்த பின்னர் 3 நிமிடத்தில் வடிக்கவும்.

பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.

அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்கமப்பூ அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கேசரி கலரை கரைத்து லேசாக தெளித்து விடவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.

தம் அடங்கியதும் திறக்கவும். சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow