பனீர் தயாரிப்பது எப்படி?

Oct 20, 2021 - 08:04
 0  352
பனீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் 

பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சை - பாதி

செய்முறை

1. ஒரு லிட்டர் பாலை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து அரை லிட்டர் வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.

2. பின்னர் சிம்மில் வைத்து, பாலில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கிளறவும். சிறிது நேரத்தில் பால் திரிந்து, திரி திரியாக வரும்.

3. திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

4. துணியைச் சுற்றி இறுகக் கட்டவும். நீர் அடி வழியே வெளியேறும் விதமாக ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரத்தின் மேல் அதனை வைக்கவும்.

5. அதன் மேலே வெயிட் வைக்கவும். ஒரு தண்ணீர் பாத்திரத்தைக்கூட வைக்கலாம்.

6. எட்டில் இருந்து பத்து மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியிலே வைக்கவும். நீர் எல்லாம் வடிந்து கெட்டியான பனீராக அது   மாறிவிடும்.

7. அதனை விரும்பிய வடிவில் துண்டங்கள் போட்டுக் கொள்ளலாம். வீட்டிலேயே தயாரிக்கும் கலப்படம் இல்லா பனீர் ரெடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow