நீரில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்.

 0  61
நீரில் ஊற வைத்த பாதாம்  சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்.

நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவுகளுக்கு பின்னும் பல வித அறிவியல் பூர்வ தன்மைகள் உள்ளன. ஒரு சில உணவுகள் உடலுக்கு நன்மையை தர கூடிவையாக இருக்கும். பாதாமை இரவில் படுக்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட கொடுப்பார்கள்.

இதற்கு காரணம், பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். மேலும் பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து, உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

தினமும் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கும். அத்துடன் பல வகையான வியாதிகளில் இருந்தும் இவை விடுவிக்க செய்யும். நீரில் ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தரும். நீரில் ஊற வைத்த பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

உடல் எடையை குறைக்க: பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். போலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.

செரிமானம்: பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.

முதுமையைத் தடுக்கும்: நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும். இரத்த சர்க்கரை அளவு: பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow