வாழைப்பூ சுண்டல்

வாழைப்பூ சுண்டல்

வாழைப்பூ சுண்டல்

தேவையான பொருட்கள்:
1 சிறிய வாழைப் பொத்தி/ பூ
1-2 மேகரண்டி எண்ணை
வெங்காயம் தேவையான அளவு
பச்சைமிளகாய் தேவையான அளவு
கடுகு, பெரும்சீரகம், கருவேப்பிலை தாளிக்க தேவையான அளவு
2-3 மேகரண்டி தேங்காய்பூ - தேவையான அளவு
1 தேக மஞ்சள் தூள்
உப்புத்தூள் தேவையான அளவு

** பல பொருட்கள் தேவையான அளவு எனக் குறிப்பிட்டுள்ளேன். வாழைப்பூவின் அளவைப்பொறுத்து பெருட்கள் தேவைப்படும். இங்கு நான் சிறிய வாழைப்பொத்தியை பாவித்துள்ளேன்.

செய்முறை:
வாழைப்பூவின் மேல்மடல்களை மஞ்சளான மடல்பகுதி வரும்வரை உரித்து அகற்றவும். பின்பு அந்த பொத்தியின் நடுப்பகுதியில் கத்தியினால் கொத்தி/ கீறல்கள் போட்டு அரிந்து உப்பு சேர்த்த நீரில் போட்டு ஊறவிடவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதனுள் 1 -2 மேகரண்டி எண்ணைவிட்டு அதனுள் கடுகு, பெரும்சீரகம், கருவேப்பிலை, வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதனுள் வெட்டிய வாழைப்பூவை நீரில்லாமல் பிழிந்தெடுத்துச் சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்துக்கிளறவும். வாழைப்பூ அவிந்ததும் தேங்காய் பூ, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். வாழைப்பூ உப்புத் தண்ணீரில் ஊறியதனால் உப்பு சேர்க்கும் பொழுது முதலில் குறைவான அளவில் உப்பைச் சேர்த்து சுவையை சரிபார்த்துக்கொள்ளவும்.

*** இந்த சுண்டலை சிறிய இறால் சேர்த்தும் செய்யலாம்.