இனிப்பான லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 1/2 கப்
சீனி - 1 1/2 கப்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
முந்திரி - 4
பாதாம் - 8
மஞ்சள் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் கடலைமாவுடன் கலர் பவுடர், சோடா உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டி அல்லது சாரணியை எண்ணெயின் மேல் பிடித்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து அதில் ஊற்றி தேய்த்து விடவும்.
3. அதிக நேரம் பொரிய விடாமல் சிறிது நேரத்திலேயே எண்ணெயை வடித்து எடுத்து விடவும். பூந்தி பொரிந்தால் மொறுமொறுவென்றாகி விடும் லட்டு பிடிக்க வராது.
4. மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு செய்யவும். சீனி கரைந்து ஒரு கம்பி பதம் வந்தால் போதும். அதிக நேரம் கொதிக்க கூடாது.
5. பொரித்து வைத்திருக்கும் பூந்தியில் அரை கப் அளவை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு முறை ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுக்கவும்.
6. அரைத்த பூந்தியை மீதமிருக்கும் பூந்தியுடன் சேர்த்து கலந்து அதை சீனி பாகில் போட்டு நன்கு கலந்து விடவும்.
7. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரி பாதாமை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
8. வறுத்தவற்றை பூந்தியுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு பூந்திக் கலவையை லட்டுக்களாக பிடித்து வைக்கவும்.
9 பூந்திக் கலவை முழுவதையும் லட்டுகளாகப் பிடித்து வைக்கவும். சுவையான லட்டு தயார்.
What's Your Reaction?






