பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்
ஆண் : ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா….
ஆண் : ஆள நினைக்கும் மாடிங்க வர்க்கம்
நம்ம குட்டித்தான் வளைஞ்சிடுச்சு முதுகு
பெண் : ஆன வரைக்கும் ஆட்டி அசைப்போம்
அட அப்பத்தான் அடங்கி நிற்கும் திமிரு
ஆண் : அரிசிய பதுக்குற பெருச்சாளி
அவனுக்கு பெயர் இங்கு முதலாளி
பெண் : கலப்படம் புரிகிற படுபாவி
அவனுக்கு இல்லை ஒரு மனசாட்சி
ஆண் : தீமை இங்கு தலையெடுக்க…..
குழு : விடலாமா விடலாமா
ஆண் : தருமம் இங்கே கால் தடுக்கி..
குழு : விழலாமா விழலாமா
ஆண் : வாடா நாம தோள் கொடுப்போம்
ஆண் : ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா..
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்
பெண் : ஏழ மனச கோழ மனச
அட இப்பவே கை கழுவி விடுவோம்
ஆண் : ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு
அட இப்பவே கண் சிவக்க எழுவோம்
பெண் : ஒத்தக் கையும் நமக்கொரு துணையாச்சு
மத்த கையும் அதனுடன் இணையாச்சு
ஆண் : சத்தியத்த சாய்த்திட முடியாது
காத்தடிச்சு நாணலும் ஒடியாது
பெண் : காட்டருவி ஓட்டமிது..
குழு : அடங்காது அடங்காது
பெண் : வீரர்களின் கூட்டமிது..
குழு : உறங்காது உறங்காது
பெண் : வெற்றி இனி நம்ம பக்கம்
ஆண் : ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா..
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்