பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண் : ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே
பெண் : ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே…
பெண் : முந்நூறு நாள் சுமந்து
மூச்சடக்கி ஈன்றெடுத்து
கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே
பெண் : முன்னேறும் பாதையிலே
முள்ளை வைக்கும் பூமியிலே
அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே
பெண் : மானம் உயிரினும் மேலாக
வாழும் தமிழ் மகன் நீயாக
தென்னாடும் போற்ற
உன்னை எந்நாடும் வாழ்த்த
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்
பெண் : ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே….
பெண் : பொல்லாத செயலைக் கண்டு
பொறுத்தது போதும் என்று
பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே
பெண் : நல்லோர்க்கு சோதனையும்
நாளுமொரு வேதனையும்
சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே
பெண் : நாளை எதிர்வரும் காலங்கள்
யாவும் வசந்தத்தின் கோலங்கள்
அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்
பெண் : ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே
பெண் : ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே…