பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா
ஆண் : விண்மீனே விண்மீனே
விண்மீனே விண்மீனே
சின்ன சின்ன நிழல் தேடும்
வீதி எங்கும் விளையாடும்
நாளை வானெங்கும் ஜொலித்தாடுமே
ஆண் : விண்மீனே
குழு : விண்மீனே
ஆண் : விண்மீனே
குழு : விண்மீனே
ஆண் : காலம் மாறாமலா போய் விடும்
ஆண் : உன் பேரை
குழு : உன் பேரை
ஆண் : உன் பேரை
குழு : உன் பேரை
ஆண் : உலகம் அறியாமலா முடிந்திடும்
ஆண் : ஹூ ஓ ஹூ ஓஒ
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : பட்டாம் பூச்சிக்கு
கனவுகள்தான்
வானில் பறக்க கூடாதா
இதயம் ஏங்குமா
வலிகள் தாங்குமா
ஆண் : சின்ன சின்ன
திறமைகள்தான்
வெளியே ஒருநாள் வாராத
உலகம் சாடுமா
கதவை மூடுமா
ஆண் : விழும் பனியின் துளிகளே
முத்து போல மாறும்
தெரு ஓர திறமைகள்
என்று மேடை ஏறும்
வரும் காலமே மாறுமே
வானம் கையில் சேரும்
ஆண் : விண்மீனே விண்மீனே
காலம் மாறாமலா போய்விடும்
உன் பேரை உன் பேரை
உலகம் அறியாமலா முடிந்திடும்
குழு : …………………….
ஆண் : நிலவும் பவனி வரும் பொழுது
ஜன்னல் சாத்தி கொண்டாலும்
நிலவு தேயுமா
அழகு சாயுமா
ஆண் : வண்ண பறவை
சிறகுகளை
வலையில் கட்டி போட்டாலும்
பறவை தூங்குமா
ஊமை ஆகுமா
ஆண் : பசியோடு இருந்தவன்
கனவு என்னாகும்
உயிரற்ற சடலம் போல்
கணம் கூடி ஏங்கும்
விதி என்பதையே தீர்ப்பெனில்
திறமைகென்ன வேலை
ஆண் : விண்மீனே
குழு : விண்மீனே
ஆண் : விண்மீனே
குழு : விண்மீனே
ஆண் : காலம் மாறாமலா போய் விடும்
ஆண் : உன் பேரை
குழு : உன் பேரை
ஆண் : உன் பேரை
குழு : உன் பேரை
ஆண் : உலகம் அறியாமலா முடிந்திடும்