Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Vilayattaa Padakotti lyrics from Dhoni movie - தோணி திரைப்படத்திலிருந்து விளையாடா படகோட்டி பாடல் வரிகள்

விளையாடா படகோட்டி பாடல் 2012-ல் வெளியான தோணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: ஹரிசரண்

Vilayattaa Padakotti is a song from the 2012 Tamil film Dhoni, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
தோணி
Year
2012
Singers
Haricharan

Lyrics(Tamil)

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.

கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.

தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி
சுத்தி சுழலும் போதும்
அக்கரைக்கு போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டும் மழையில் பொறுமையும் கொண்டு
தொலை தூரம் சேரத்தானே தள்ளாடும்
தன்னோட வழி எல்லாம் தன்னைத்தவிர துணையுண்டா
திசையெல்லாம் வழியாகும் ஒருவழிதான் உனக்காகும்
எப்போது கரையைச்சேரும் ஓடம் ஓடம்?

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.

கட்டுமரம் என்றால் என்ன
வெட்டுப்பட்ட மரங்கள்தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்டபாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப்பார்க்கும்
எட்டி நிற்கத் திரும்பத்திரும்ப விளையாடும்
கடலிருந்தும் கட்டுமரம் ஆழத்தை அறியாது
கடல்சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு?

விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்.
கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

Vilayattaa Padakotti song FAQ

Who sang Vilayattaa Padakotti?

Vilayattaa Padakotti was sung by Haricharan for the 2012 Tamil film Dhoni.

Who wrote the lyrics of Vilayattaa Padakotti?

The lyrics of Vilayattaa Padakotti were written by Na. Muthukumar.

Who composed the music for Vilayattaa Padakotti?

The music for Vilayattaa Padakotti was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vilayattaa Padakotti from?

Vilayattaa Padakotti is from the Tamil film Dhoni, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.

விளையாடா படகோட்டி பாடலை பாடியவர் யார்?

விளையாடா படகோட்டி பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தோணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்