Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Vaangum Panathukkum lyrics from Dhoni movie - தோணி திரைப்படத்திலிருந்து வாங்கும் பணத்துக்கும் பாடல் வரிகள்

வாங்கும் பணத்துக்கும் பாடல் 2012-ல் வெளியான தோணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vaangum Panathukkum is a song from the 2012 Tamil film Dhoni, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
தோணி
Year
2012

Lyrics(Tamil)

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை...
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை...
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னாடங்காய்ச்சி வாழ்க்கை
கனவில்தானே நமக்கு பல அரண்மனைங்க இருக்கு
தண்ணிக்கும் தரைக்கும் அலையும்
ஒரு வாத்தைப் போல வாழ்க்கை
மனசில் சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா ?
சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு ..
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்..

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...

கும்புடு போட்டு போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூனிப் போச்சுடா
உறவு நெறைய இருக்கு, அது செலவுதானே நமக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா
தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல
சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் மொளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை...
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை...
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே ஒரு சம்பந்தமில்லை...
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லை...

Vaangum Panathukkum song FAQ

Who sang Vaangum Panathukkum?

Vaangum Panathukkum was sung by S. P. Balasubramaniam for the 2012 Tamil film Dhoni.

Who wrote the lyrics of Vaangum Panathukkum?

The lyrics of Vaangum Panathukkum were written by Na. Muthukumar.

Who composed the music for Vaangum Panathukkum?

The music for Vaangum Panathukkum was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vaangum Panathukkum from?

Vaangum Panathukkum is from the Tamil film Dhoni, released in 2012. The film has 5 songs on Tamilputhumai.

வாங்கும் பணத்துக்கும் பாடலை பாடியவர் யார்?

வாங்கும் பணத்துக்கும் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தோணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்