பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு
மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்
பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
ஆண் : வானம் பார்த்த
புஞ்சை இப்போ நஞ்சை ஆச்சே
பாடுபட்ட சாதி மட்டும் பஞ்சை ஆச்சே
பெண் : சோறு இல்ல தண்ணி இல்லை என்ன பேச்சு
அஞ்சி ஆண்டு பித்தம் எல்லாம் எங்க போச்சு
ஆண் : ஹே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி
அடியே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி
ஆண் : சாமத்துல பார்த்துக்கோ
சங்கதிய கேட்டுக்கோ
ஆண் : சாமத்துல
பெண் : அஹாஹான்
ஆண் : சங்கதிய
பெண் : ஆஹா ஹான்
பெண் : சரிதான் வாய்யா
ஊரு வம்பு என்னத்துக்கு
ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்
பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு
ஆண் : மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்
பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா
ஆண் : ஆஹான்
பெண் : மத்தத வெளியில் சொல்லலாமா
ஆண் : ஆஹான்
பெண் : கட்சி விட்டு கட்சி இப்போ தாவுறாங்க
கண்டதெல்லாம் கூட்டத்தில பேசுறாங்க
ஆண் : நோட்ட தந்து ஓட்டு வாங்கி போகுறாங்க
ஓட்டு போட்ட மக்கள் இங்க வேகுறாங்க
பெண் : ஹே ராசாவே இப்ப அரசிய தேடாதே
அட என் ராசாவே இப்ப அரசிய தேடாதே
பெண் : வாடை என்ன வாட்டுது
போர்வை ஒன்னு கேட்குது
பெண் : வாடை என்ன
ஆண் : ஹ்ஹ்ஹும்
பெண் : போர்வை ஒன்னு
ஆண் : ஹ்ஹ்ஹும்
ஆண் : பார்த்து போர்த்து
பட்டுன்னு புடிச்சுக்க
பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்
பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு
ஆண் : ஹே மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்
பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்