பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ……
பெண் : ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ……
ஆண் : பூங்காத்தே………ஏ…..
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா……தனியா…..
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
பெண் : பூங்காத்தே…….ஏ….
என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ…..மனமோ…..
துணை இல்லாம இங்கே வாடுதே
ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்
கன்னித் தமிழ்
மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை
உள்ளம் ஏற்குமா
பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே
இங்கு எங்கும் இல்ல
காத்த புடிச்சு கையில
வைக்கும் ஆளும் இல்ல
கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே…
ஆண் : பூங்காத்தே………ஏ…..
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா…..தனியா….
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..
பெண் : தென் மலைக்காத்து வீசுற போது
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே
நெஞ்சில காதல் பொங்குற போது
ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே
ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல
நல்ல உள்ளம் இல்ல
உள்ளம் இருக்கும் வீட்டுல
நல்ல செல்வம் இல்ல
ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்
பெண் : பூங்காத்தே…….ஏ….
என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ…..மனமோ…..
துணை இல்லாம இங்கே வாடுதே
ஆண் : பூங்காத்தே………ஏ…..
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா…..தனியா….
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..
பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே
ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…..