வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க
வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ…... (வட்ட)
தமிழ் போல பெண்ணே உன்னை
தவறின்றி வாசித்தேன்
தவம் போல அன்பே உன்னை
தவறாமல் யாசித்தேன்
உறங்காமல் நெஞ்சே உன்னை
உயிராக ஸ்வாசித்தேன்
தெய்வத்தை வணங்கும் போதும்
உனை தானே யோசித்தேன்......(வட்ட)
நிறைவாக வீட்டுக்குள்ளே குடியேறி வாழலாம்
பதினாறு பிள்ளை பெற்று வெளியேற பார்க்கலாம்
பசியேதும் வந்தால் முத்தம் உணவாக உண்போமா
இரண்டாக இருக்கும் உயிரை ஒன்றாக சேர்க்கலாம்(வட்ட)