உல்லாச மங்கை இல்லாமல் போனால்
உலகமே கிடையாது இதை
சொல்லாமல் தெரிந்து கொள்ளாமல் போனால்
சந்தோசம் அடையாது வாழ்க்கை
சந்தோசம் அடையாது.......(உல்லாச)
சிங்கார முல்லை விரிந்த பின்னாலே
அரும்பே அரும்பாது இந்த
சீரான பருவம் மறைந்த பின்னாலே
திரும்பவே திரும்பாது......(உல்லாச)
கண்ணாலே பேசி முன்னாலே வந்தால்
கவலைகள் தெரியாது ஆசை
கடலாகப் பொங்கி கரை மீறும் போது
ஒன்றுமே புரியாது செய்வது
ஒன்றுமே புரியாது...... (உல்லாச)
வலிய வந்ததை நழுவ விடுபவன்
வகை கெட்ட ஏமாளி கையில்
வந்ததைக் கொண்டு இன்பங்களுண்டு
வாழ்பவன் அறிவாளி – உலகில்
வாழ்பவன் அறிவாளி....(உல்லாச)