தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்
எண்ணம் தந்தவர் திருவள்ளுவர் தேன் போலே
கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் (தித்திக்கும்)
பஞ்சம் வராமலே பகைமை இல்லாமலே
பசியும் பிணியும் பரவ விடாமலே
வஞ்சமும் சூழ்ச்சியும் வளரவிடாமலே
வாட்டம் இன்றியே நாட்டினில் அனைவரை
வாழ வைத்திடும் ஆட்சி நிலை பெறவே (தித்திக்கும்)
உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது
உலகினில் புகழ் இன்றி எதுவுமே நிலைக்காது
உயிரினும் மேலாம் மனிதர்க்கு தன்மானம்
அதுவே பெருமை தருமென
அருமையாம் குறளிலே அமுதமெனவே...(தித்திக்கும்)