கன்னிப் பருவம் அவள் மனதில்
என்ன நினைத்தாளோ – நான்
என்னையறியாமல் செய்த பிழை
கண்டு பொறுப்பாளோ – தென்றலே.....(கன்னி)
கன்னிப் பருவம் அவள் மனதில்
ஒன்றும் நினைக்கவில்லை – என்று
அன்புடன் அங்கு சென்று அவர்க்கு
ஆறுதல் சொல் தென்றலே....(கன்னி)
அத்திப்பழ உதட்டில் பிறந்த
ஆறுதல் வார்த்தைகளை
தித்திக்கும் தேன் தமிழில் குழைத்து
தந்தவர் யார் தென்றலே....(கன்னி)
நல்லவர் வாழ்க்கையிலே பங்கு கொள்ளும்
பாவை விளக்கென்று நான்
உள்ளம் கனிந்து சொன்ன
உண்மைதனை சொல்லு இளம் தென்றலே (கன்னி)
உண்மை உணர்ந்து கொண்டேன் தங்கமே
உன்னைப் புரிந்து கொண்டேன்...
கன்னிப் பருவம் அவள் மனதில்
என்ன நினைத்தாளோ...