ஆடி ஆடி என்ன கண்டாய் நல்ல பாம்பே நீ
ஆடினது போதும் சும்மா நில்லு பாம்பே ஹேய்
உயிர் ஓடிவிட்டால் ஆடும் ஆட்டமெல்லாம் ஓடும்
ஆடித்தேடி என்ன பலன் சொல் பாம்பே...(ஆடி)
சந்திரனை சூரியனைத் தாவி தீண்டலே
சத்தியமா அந்தகால பாம்பு நீயில்லே – சிவா
சங்கரன் தலையிலுள்ள பாம்புமேயில்லே
சக்தி மகனோடு விளையாடு மயில் காலடியில்
ஓடிவந்து தெண்டனிட்ட பாம்பு நீயல்லோ (ஆடி ஆடி)
ஆள்ளி அம்மா வீடு தேடி வந்ததாலே –உனக்கு
நல்லகாலம் வந்திருக்கு இந்தவேளை – நீ
நல்லபடி அங்கு சென்று நியாமா நடந்துகொண்டு
உள்ளபடி வெற்றியுடன் வா மாப்பிள்ளே (ஆடி ஆடி)