பாடகி : கே. பி. சுந்தராம்பாள்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : பவள மணிமாளிகையில்…
பனி மலரின் பஞ்சணையில்…
பால் பிசடித்தமுகம் வழி தவறிச் சென்றதனால்…
தாழ்ந்து தரம் இழந்து தன்னையே தானிழந்து
தன்னையே தானிழந்து…
பெண் : தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
பெண் : தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
பெண் : கிளை விட்டுக் கிளை தாவி
குடி வைத்துக் கொண்டவன்
மிதி பட்டு வந்தானம்மா
கிளை விட்டுக் கிளை தாவி
குடி வைத்துக் கொண்டவன்
மிதி பட்டு வந்தானம்மா
இன்று மனம் கெட்டு குணம் கெட்டு
மதி கெட்டு நிதி கெட்டு
நிலை கெட்டு வந்தானம்மா
இங்கு நேராக வந்தானம்மா
பெண் : தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
பெண் : பொய் நெல்லை குத்தியே
பொங்க நினைத்தவன்
கை நெல்லும் விட்டானம்மா
பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்
கை நெல்லும் விட்டானம்மா
பள்ளத்தில் வீழ்ந்து எழுந்த பின் பல்லக்கை
தேடி நடந்தானம்மா இங்கு தேடி நடந்தானம்மா
பெண் : இவன் போட்ட கணக்கொன்று
அவள் போட்ட கணக்கொன்று
இரண்டுமே தவறானது
இவன் போட்ட கணக்கொன்று
அவள் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது
யார் போட்ட புதிரிக்கோ இருவரும் விடையாகி
நின்றதே முடிவானது
மனித குலத்துக்கே கதையானது
மனித குலத்துக்கே கதையானது…