Tamil Songs lyrics · 2014
Sollividu Sollividu lyrics from Kaaviya Thalaivan movie - காவிய தலைவன் திரைப்படத்திலிருந்து சொல்லிவிடு சொல்லிவிடு பாடல் வரிகள்
சொல்லிவிடு சொல்லிவிடு பாடல் 2014-ல் வெளியான காவிய தலைவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: முக்கேஷ்
Sollividu Sollividu is a song from the 2014 Tamil film Kaaviya Thalaivan, written by Pa. Vijay and sung by Mukesh.
- Movie Name
- Kaaviya Thalaivan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவிய தலைவன்
- Year
- 2014
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Mukesh
Lyrics(Tamil)
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு
ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்
உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
ஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
ஓ… உலகமே யுத்தம் எதற்கு
ஓ… உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ… இறைவனே துயரம் எதற்கு
ஓ… இதயமே வன்மம் எதற்கு
கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து
போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து போரை நிறுத்து
Sollividu Sollividu song FAQ
Who sang Sollividu Sollividu?
Sollividu Sollividu was sung by Mukesh for the 2014 Tamil film Kaaviya Thalaivan.
Who wrote the lyrics of Sollividu Sollividu?
The lyrics of Sollividu Sollividu were written by Pa. Vijay.
Which movie is the song Sollividu Sollividu from?
Sollividu Sollividu is from the Tamil film Kaaviya Thalaivan, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.
சொல்லிவிடு சொல்லிவிடு பாடலை பாடியவர் யார்?
சொல்லிவிடு சொல்லிவிடு பாடலை பாடியவர் முக்கேஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.