Alap
(இசை)
பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஆண்: ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்…
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
(இசை)
பெண்: ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்…
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை…
(இசை)
ஆண்: பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
பெண்: தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்…
ஆண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
பெண்: கண் தேடுதே சொர்க்கம்
ஆண்: கை மூடுதே வெட்கம்
ஆண் பெண் இருவரும்:
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
(இசை)