பாடகர் : விஜய் விகாஷ்
இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்
ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
ஆண் : உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே
ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
வாழ்ந்தவன்தான் நானம்மா
கால்களி கட்டிலிலே போவதெங்கே
சொல்லம்மா
ஆண் : என்ன நினைத்தாயோ
என்னை படைத்தாயோ
என்னை மறந்தாயோ
உயிர் துறந்தாயோ
ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
ஆண் : தாயின்றி உயிர்கள் உலகில் ஏதம்மா
நீயின்றி நானும் வாழக் கூடுமா….
ஆண் : தொட்டிலிலே தாலாட்டிய தாயம்மா
கட்டிலிலே கண்ணுறங்குவது ஏன்னம்மா
கட்டிலிலே கண்ணுறங்கும் பூவம்மா
விட்டு விட்டு போனதுதான் நியாயம்மா
ஆண் : அடி தாங்கலயே
கண்ணிரெண்டும் தூங்கலயே
நெஞ்சம் அது ஆறலையே
உயிர்தான் காணலயே
என் உயிர்தான் காணலயே…
ஆண் : பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
ஆண் : உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே