Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Pachchai Nirame lyrics from Alaipayuthey movie - அலைபாயுதே திரைப்படத்திலிருந்து பச்சை நிறமே பாடல் வரிகள்

பச்சை நிறமே பாடல் 2000-ல் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: ஹரிசரண்

Pachchai Nirame is a song from the 2000 Tamil film Alaipayuthey, written by Vairamuthu and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
அலைபாயுதே
Year
2000
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..

பச்சை நிறமே பச்சை நிறமே..
இலையின் இளமை பச்சை நிறமே..
உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
எனக்குச் சம்மதம் தருமே.. எனக்குச் சம்மதம் தருமே..


கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்;
அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள்; மஞ்சள்; மஞ்சள்;
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்


சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு


அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே..
கார்காலத்தின் மொத்த நிறமே..


காக்கைச் சிறகில் காணும் நிறமே..
பெண்மை எழுதும் கண்மை நிறமே..
வெயிலில் பாடும் குயிலின் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..

சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
மழையில் உடையும் தும்பை நிறமே..
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
விழியில் பாதி உள்ள நிறமே..

மழையில் உடையும் தும்பை நிறமே..
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே..

Pachchai Nirame song FAQ

Who sang Pachchai Nirame?

Pachchai Nirame was sung by Haricharan for the 2000 Tamil film Alaipayuthey.

Who wrote the lyrics of Pachchai Nirame?

The lyrics of Pachchai Nirame were written by Vairamuthu.

Which movie is the song Pachchai Nirame from?

Pachchai Nirame is from the Tamil film Alaipayuthey, released in 2000. The film has 9 songs on Tamilputhumai.

பச்சை நிறமே பாடலை பாடியவர் யார்?

பச்சை நிறமே பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அலைபாயுதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்