பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே
விடுகதை இது பெண்ணே
விடை கண்டுபிடி கண்ணே
ஆண் : ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே
ஆண் : காடு மலை ஏறி போகிற நதிக்கு
பொம்பளைங்க பேரு வந்தது எதுக்கு
தண்ணீரு இல்லாமே நதியே இல்லீங்க
கண்ணீரு இல்லாமே பொம்பள இல்லீங்க
ஆறும் பொண்ணும் காலம் வந்தா
கலங்கி போகும் பாரு
ஆண் : ஓடம் எங்கே அடியே…..
ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே…
ஆண் : ஆறச் சொல்லி ஆவதென்னவோ குயிலே
ஆபத்துக்கு பாவமில்லையே மயிலே
நல்லவன் கெட்டாலும் நன்மைதான் உண்டாகும்
தங்கத்தை சுட்டாலும் இன்னும்தான் நல்லாகும்
ஆண் : ஆடி மாசம் போன பிறகு
கூடி வரட்டும் காலம்
ஆண் : ஓடம் எங்கே அடியே…..
ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே
விடுகதை இது பெண்ணே
விடை கண்டுபிடி கண்ணே
ஆண் : ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே…