பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண் : என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
ஆண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு
பெண் : ஊரு வம்பு இழுக்க
உன்ன ஊரு சேர்க்கல
பால போல மனசு அத யாரும் பார்க்கல
ஆண் : அன்னமே…..ஏ….சோலையில் மட்டும்
பூவு பூப்பது இல்லையே
வேலியில் கூட பூவும் பூக்குமே முல்லையே
பெண் : போதும் கேலியே…
ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
பெண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண் : என்னடி கண்ணு வெட்கமா
பெண் : இடுப்பில் சேல நிக்குமா
ஆண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
பெண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண் : ஈச்சம் பாயை போட்டு
ஒரு பேச்சு பேசணும்
வயசுப் பொண்ண போல
வந்து காத்து வீசணும்
பெண் : என்னமோ…….என்னமோ ஒண்ணு
சொல்ல தோணுதே சொல்லவா
வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா
ஆண் : மாலை சூடவா….
பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண் : என்னடி கண்ணு வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா
பெண் : மல்லிக பூவு போடுதே மாராப்பு
ஆண் : மன்மத காத்து வீசுதே யார் காப்பு….